உலங்கு வானூர்தி மூலம் சிவனொளிப்பாதமலைக்கு மின் மாற்றிகள் கொண்டு செல்லும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பணிகள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து இடம் பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சிவனொளிப்பாதமலைக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும், தடை இன்றி மின்சாரம் வழங்குவதற்கும் இலங்கை மின்சார சபை முன்வந்துள்ளது.
சிவனொளிப்பாதமலைக்கு செல்லும் பிரதான வீதியின் மூன்று இடங்களில் புதிய மின் மாற்றிகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துரிதமாக பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்காக இரத்மலானை விமான படையின் உலங்கு வானூர்தி மூலம் மின் மாற்றிகள் மற்றும் மின் உபகரணங்கள் கடந்த இரண்டு நாட்களாக கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




