வற் வரி தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!

 

2024 ஆம் ஆண்டில், 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 20 ஆயிரத்து 467 ரூபாவை VAT வரி செலுத்த வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில், 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 9 ஆயிரத்து 941 ரூபாவை VAT வரியாக செலுத்தி வருகின்றது.

இதன்படி, இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், அடுத்த வருடம் செலுத்தப்பட வேண்டிய VAT வரித் தொகையானது 105 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு அரசாங்கம் எதிர்பார்க்கும் மறைமுக வரி வருமானம் 2 ஆயிரத்து 740 பில்லியன் ரூபாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *