மதுபோதையில் பெண்ணொருவர் முச்சக்கரவண்டியை செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கண்டி ஏ26 மஹியங்கனை வீதியில் மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற பெண்ணொருவரை போக்குவரத்து பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தெல்தெனிய வாகலை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபரை தெல்தெனிய நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.





