தீவிரமடையும் டெங்கு…! 49 நோயாளர்கள் உயிரிழப்பு…!வெளியான அறிவிப்பு…!samugammedia

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இன்று (20) காலை வரை இலங்கையில் 83,432 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடமும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 17,604 ஆகும்.

கம்பஹா மாவட்டத்தில் 15,720 டெங்கு நோயாளர்கள், கண்டி மாவட்டத்தில் 8,634 பேர், களுத்துறை மாவட்டத்தில் 5,006 பேர் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 3,936 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை 65 டெங்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இனங்காணப்பட்டுள்ளன.


தற்போது வைத்தியசாலைகளில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சந்தேகத்திற்கிடமானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாகும்.


இந்த வருடத்தில் இதுவரை 49 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.


டெங்கு நோய் குறித்த ஆரம்ப கால விழிப்புணர்வினால் நோயாளர்கள் காலதாமதமின்றி வைத்தியசாலைகளுக்கு வருகை தருவதாகவும், வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் நோயாளர்களை உரிய முறையில் நிர்வகிப்பதாலும் டெங்கு இறப்பு வீதம் மிகக் குறைவாகவே காணப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *