மின்சார கம்பியில் சிக்கிய யானை பரிதாபமாக உயிரிழப்பு…!samugammedia

சோள வயலைச் சுற்றி மின்சார கம்பியை பயன்படுத்தி யானையை உயிரிழக்க செய்த குற்றச்சாட்டில் 54 வயதுடைய விவசாயி ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கஹடகஸ்திகிலிய தள அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கதுரகஸ்கட, ரத்மல்கஹவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹகஸ்திகிலிய, நெலுகொல்லக்கடை, குரக்குரகம பிரதேசத்தில் அமைந்துள்ள சோள வயல் ஒன்றில் 35 வயதுடைய 8 அடி உயர யானை மின்சார வயர் ஒன்றினை சுற்றியதால் மின்சார கம்பியில் சிக்கியுள்ளதாக கஹ்தகஸ்திகிலிய தள காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *