நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மரபுத் திங்கள் விழாவும் , தைப் பொங்கல் நிகழ்வும் எதிர்வரும் ஐனவரி 27 ஆம் திகதி தமிழிசைக் கலாமன்ற அரங்கில் எழுச்சிகரமாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வானது மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெறவுள்ளது.
கனடிய நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடும் தை மாதம் தமி ழ்மரபுரிமைத் திங்கள் ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், வளர்க்கும் வண்ணம், பகிரும் வண்ணம் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.





