திருகோணமலை-நாமல்வத்தை வயல் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று காலை(23) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை கடற்படையில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிண்ணியா -குறிஞ்சாங்கேணி பகுதியைச் சேர்ந்த ரபீக் முகமது முஸம்மில் (34வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிண்ணியாவில் இருந்து நாமல்வத்தை பகுதியில் உள்ள வயலுக்கு குறித்த நபர் வருகை தந்ததாகவும் பின்னர் மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக கத்தியை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் மாலை நேரமாகியும் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்துக்கு வராததால் வயல் பகுதிக்கு தேடி சென்றதாகவும் இதே வேளை வயலுக்குள் வரம்பில் சறுக்கி விழுந்து கிடந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.