இளைஞனுக்கு எமனாக வந்த தேங்காய் எண்ணெய் போத்தல்…!நாவலப்பிட்டியில் துயரம்…! samugammedia

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இளைஞனொருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டிற்கு தேவையான தேங்காய் எண்ணையை வாங்குவதற்காக குறித்த இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்ற போது மாடிப்படியில் தவறி விழுந்தபோது    அவரது கையிலிருந்த தேங்காய் எண்ணெய்  போத்தல் இதன்போது  உடைந்ததில் அவரது  கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் உடனடியாக குறித்த இளைஞர் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி கோரக்காஓயா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய மொஹமட் ஆசாத் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *