திடிரென வீசிய சுழற் காற்றினால் நான்கு மீன் வாடிகள் சேதம்..!!!Samugammedia

திடிரென வீசிய சுழற் காற்றினால் மூதூர் கடற்கரையில் இருந்த நான்கு கருவாட்டு வாடிகள் சேதமடைந்துள்ளன.அத்தோடு படகொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இவ் சுழற் காற்றானது சிறிது நேரம் வீசியதாகவும் இதன்போது வாடிகளின் கூரையில் அல்லுண்டு சென்று சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீன் வாடிகளில் இருந்த மீனவர்களுக்கு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

Leave a Reply