ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி அல்லது VAT 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மது போத்தல் ஒன்றின் விலை 90 முதல் 150 ரூபா வரை அதிகரிக்குமென மதுபான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
எத்தனால், வெற்று மதுபான போத்தல்கள், மதுபான லேபிள்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட மதுபானம் அடங்கிய போத்தல்கள் மீதான VAT வரியைச் சேர்த்தமையே இதற்குக் காரணம் என நிறுவனங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதன்படி, தற்போதைய விற்பனை விலையான 3260 ரூபாவைக் கொண்ட விஷேட வகை (கல்) மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.