பாடசாலை மாணவர்கள் இருவரின் மோசமான செயல்..! பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

 

புத்தளம் – முந்தல் பகுதியிலுள்ள இரண்டு பாடசாலைகளுக்குள் புகுந்து பாடசாலை உபகரணங்கள் மற்றும் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் மாணவர்கள் இருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு பாடசாலைகளிலும் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளன. 

சம்பவத்தில் மாணவர்கள் இருவர் திருடப்பட்ட உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வருடத்தில் இரண்டு தடவைகள் குறித்த இரண்டு பாடசாலைகளிலும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply