கொழும்பில் விடுதி ஒன்றில் மர்மமாக உயிரிழந்த நபர் : தப்பியோடிய பெண் – பெரும் பதற்றம்.,!samugammedia

கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ பிரதேசத்தில் ஹோட்டலில் தங்கிய குடும்பஸ்தர் ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.

பெண் ஒருவருடன்  தங்கியிருந்த 55 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபருடன் வந்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருவரும் ஹோட்டலுக்கு வந்து சில நிமிடங்களில் திடீரென அறையை விட்டு பெண் வெளியே வந்துள்ளார்.

குறித்த பெண் பதற்றத்துடன் வந்து, தன்னுடன் வந்தவருக்கு உடல்நிலை சரியில்லை என்று ஹோட்டல் மேலாளரிடம் கூறியுள்ளார்.

பின்னர், முகாமையாளர் அங்கு சென்று பரிசோதித்தபோது, ​​குறித்த நபரின் வாயில் இருந்து சளி போன்று வெளிவருதை கண்டு, உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முச்சக்கரவண்டியை எடுத்து வருவதற்காக விடுதிக்கு வெளியே சென்றுள்ளார்.

இதன்போது குறித்த பெண் விடுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சுகயீனமடைந்து உயிரிழந்த நபர் வெரஹெர போதிராஜபுர பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave a Reply