கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் PHM சார்ள்ஸ், நா.ம.உறுப்பினர் சிறிதரன், வட மாகாண பிரதம செயலாளர், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவன தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொலிஸார், முப்படையினர் என பலரும் கலந்துகொண்டனர்.






