சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரிடம் அறவிடப்படும் தண்டப் பணத்தை, மீனவர்களின் நலன்புரி செயற்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும் என, அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா, கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஆகியோரின் தலைமையில், மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதுடன் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.