அதிபர் தேர்தலுக்காக மக்களுக்கு இலஞ்சம் – பகிரங்க படுத்திய அசோக் அபேசிங்க..!samugammedia

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை பத்து வீதத்தால் குறைக்கவுள்ளமையானது அதிபர் தேர்தலுக்காக மக்களுக்கு இலஞ்சம் கொடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடு என குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினால் எரிபொருள் விலையை ஓரளவு குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. 20 லட்சம் பேருக்கு அஸ்வெசும வழங்க உலக வங்கியால் 75 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. ஆனால், தற்போது 14-15 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் 4 லட்சம் குடும்பங்களுக்கு 2500 ரூபாயும், இரண்டாவது 4 லட்சம் குடும்பங்களுக்கு 5000 ரூபாயும், மூன்றாவது 4 லட்சம் குடும்பங்களுக்கு 8500 ரூபாயும், கடைசி 4 லட்சம் குடும்பங்களுக்கு 15,000 ரூபாயும் வழங்க திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த வருடம் தேர்தல் வருடம் என்பதால் மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு இலஞ்சம் வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *