தேசிய மட்டத்தில் நடைபெற்ற நாடகப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வெற்றியீட்டியதுடன் விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த 28 ஆம் திகதி கொழும்பு மருதானை டவர் மண்டபத்தில் நடைபெற்ற போட்டியில் ‘உறைந்த புலரி’ எனும் நாடகமானது இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் நாடக துறைசார் 11 விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நாடகப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.