விதை உருளைக்கிழங்குகள் பழுதடைந்தமை – விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க டக்ளஸ் ஏற்பாடு…!samugammedia

யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்குகள் பழுதடைந்தமை  தொடர்பில் நஷ்ட ஈடுகளை  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அண்மையில் வழங்கப்பட்டுள்ள  விதை உருளைக்கிழங்குகள் ஒருவகை ஒரு வகை பாக்டீரியா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளநிலையில்  இது குறித்த ஆய்வறிக்கையை  அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  விதை உருளைக்கிழங்குகள் பழுதடைந்த விவகாரம் தொடர்பில், தரகு பணம் கைமாற்றப்பட்டமைக்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் விவசாய நவீனமயமாக்கல் செயல்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்காக சுமார் 21 மெற்றிக் டன் விதை உருளைக்கிழங்குகள் இறக்குமதி செய்யப்பட்டன.

மேலும் குறித்த விடயத்தில், தவறு செய்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *