தமிழர்கள் தீர்க்கமான முடிவை எடுக்கும் ஆண்டாக 2024 அமையும்…! சம்பந்தன் நம்பிக்கை…! samugammedia

 பிறந்துள்ள 2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய எமக்குத் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஆண்டாக இருக்கும் என்று நம்புகின்றோம்  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டானது இன, மத, கட்சி வேறுபாடின்றி நாட்டு மக்களுக்குச் சமாதானம், மகிழ்ச்சி, சுபீட்சம் மிக்கதாக அமைய வேண்டும்.

இந்த ஆண்டு தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வருகின்ற ஆண்டாகத் திகழ வேண்டும்.

இந்தப் புதிய ஆண்டிலாவது புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வு காணப்பட வேண்டும். ஆட்சியில் எந்த அரசு இருந்தாலும் இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் தமிழர்களாகிய நாம் தீர்க்கமான முடிவுகளை இந்த ஆண்டில் எடுப்போம்.

அனைவருக்கும் எனது இனிய புதுவருட வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *