தற்போதைய வரி விதிப்பு மக்களை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளது – செல்வம் எம்.பி!!

தற்போதைய  வரி விதிப்பு என்பது  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளது-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.  தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் வரி விலக்கு ஏற்பட்டிருந்த  நிலையில் தற்போது வரி விதிப்பு என்பது  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளது.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயம் தொடர்பில்  அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(1)  மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,,,

வரி விதிப்பு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை நிமித்தம் குறித்த வரி அமுல் படுத்த பட்டிருக்கின்றன.மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஈவினையின்றி செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்களின் பொருளாதாரத்தில் இருந்து இந்த வரி விலக்கு அமுல் படுத்தப் பட்டிருக்கின்றமை தேவையற்ற ஒரு விடயமாக காணப்படுகிறது.இந்த வருடத்திலாவது அரசாங்கம் இந்த வரி விதிப்பை மிக குறைவான மதிப்பீடு கொள்ள வேண்டும் என எதிர் பார்க்கப்பட்டது.

மேலும்  இனப்பிரச்சினை தீர்வையும் அரசாங்கம் நடைமுறைக்கு வரும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *