ஏரியில் மூழ்கி 19 வயது இளைஞன் பரிதாபமாக பலி..!

 

தனமல்வில திலகரத்ன ஏரியில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு நேற்று பிற்பகல் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 

பலஹருவ திலகரத்ன ஏரி பகுதியில் மாடுகளுக்காக புல் வெட்டிக் கொண்டிருந்த இளைஞன் நேற்று பிற்பகல் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

கித்துல்கோட்டை தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply