அரசாங்கத்தை ஏமாற்றும் கோடீஸ்வரர்கள் – ரணிலின் அதிரடி முடிவு..!samugammedia

பாரிய வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களை வரி வலையில் சிக்க வைக்கும் வகையில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில்  High Net-worth Costumers Unit என்ற தனிப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதென திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாரியளவிலான வர்த்தகர்கள், தனிநபர்கள் மற்றும் செல்வந்தர்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“உள்நாட்டு வருவாய் திணைக்களத்தில் Large tax Payer Unit உள்ளது.  வரி ஏய்ப்பு செய்யும் தனி நபர்கள் மற்றும் கோடிஸ்வரர்களை குறி வைப்பதற்காகவே இந்த பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

நாடு பெற வேண்டிய வரியை அவர்களிடம் இருந்த்து பெறுவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *