கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்..!samugammedia

கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி சோமரத்தின நயனகுமாரி அவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இவ்வாண்டு கடற்றொழில் அமைச்சினால், குறிப்பாக வடமாகாணத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேற்படி கலந்துரையாடலில்  கடற்றொழில் திணைக்கதின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த மற்றும் திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் சுதாகரன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *