தலதா மாளிகைக்குள் துப்பாக்கி தோட்டாக்களுடன் பிரவேசிக்க முயற்சித்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குள் துப்பாக்கி தோட்டாக்களுடன் பிரவேசிக்க முயற்சித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் பயணப் பையில் இருந்து 6 வெற்று தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகையின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கேகாலையைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் கண்டி பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





