எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் (04) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் இலங்கையில் தனது சேவையை முடிப்பதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததாகவும், தற்போதைய சமூக, பொருளாதாரம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த கலந்துரையாடலின்போது இலங்கையின் அரசியல் நிலைமை மற்றும் தற்போதைய அரசாங்கம் மக்களை ஒடுக்கி விதிக்கும் அதிகப்படியான வரிகள் குறித்து சஜித் பிரேமதாச விளக்கமளித்தார்.
இதற்கு மேலதிகமாக, அரசாங்கம் எவ்வாறு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறியுள்ளது மற்றும் தேர்தலை தொடர்ச்சியாக ஒத்திவைத்தது என்பதை விளக்கிய எதிர்க்கட்சித் தலைவர், கடந்த காலங்களில் இலங்கையில் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




