மஹவ முதல் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் பாதை முழுமையான புனரமைப்புக்காக எதிர்வரும்7 ஆம் திகதி முதல் மூடவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பகுதிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்றையதினம்(04) மேற்கொண்டிருந்த பந்துல குணவர்தன யாழ் புகையிரத நிலையத்தில் விசேட கண்காணிப்பு நிகழ்விலும் கலந்துகொண்டார்.
கடந்த வருடத்தில் ரயில்வே திணைக்களம் வடக்கு புகையிரத பாதைக்கு விசேட முன்னுரிமை அளித்து பாரிய முதலீட்டை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் கீழ் அனுராதபுரத்திலிருந்து ஓமந்த வரையிலான புகையிரத பாதையானது மணிக்கு நூறு கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் நவீனப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பூரண புனரமைப்புக்காக மஹவ முதல் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் பாதை நாளை முதல் மூடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் யாழ் நிலைய அதிபர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார உட்பட புகையிரத திணைக்கள அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர்.









