திருமலையில் 1500 பரத நாட்டிய கலைஞர்களின் நடன நிகழ்வுடன் ஆரம்பமான பொங்கல் விழா…!samugammedia

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகளுடன் பொங்கல் நிகழ்வும் 1500 பரத நாட்டிய கலைஞர்களுடன், 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் விழா திருகோணமலை மகேசர் திறந்தவெளி விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவிகள் அதாவது பெண் கலைஞர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *