வட மாகாணத்தில் அதிகளவு அபின் போதைப்பொருள் பருத்தித்துறை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்கோவளம் கடற்பகுதியில் படகில் வந்த இனந்தெரியாத நபர்களினால் வீசி செல்லப்பட்ட பொதி தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் குழுவினர் சென்று சோதனை நடத்திய போது இந்த பொதியிலே 48Kg அபின் போதைப்பொருளும், 28Kg கேரள கஞ்சா போதைப்பொருளும் காணப்பட்டது. அதன் சந்தை மதிப்பு 86கோடி ரூபா ஆகும். வட மாகாணத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட அதிகளவு அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
வட மாகாண சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த குணரட்ன மற்றும் யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் காங்கேசன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையில் குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.





