நாட்டில் கடவுச் சீட்டை பெறுபவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்..!

 

ஒன்பது இலட்சத்துக்கு அதிகமான இலங்கையர்கள், கடந்தாண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல கடவுச் சீட்டை பெற்றுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 9 இலட்சத்து 10,497 இலங்கையர்கள் வெளிநாடு செல்வதற்கு தயாராகி கடவுச்சீட்டைப் பெற்றதாக குடிவரவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டில் கடவுச்சீட்டு வழங்கியதன் மூலம் திணைக்களம் 4,100 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது

மேலும் பத்தரமுல்லை, வவுனியா, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள குடிவரவு பிராந்திய அலுவலகங்கள் அந்த சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *