சுண்டிக்குளம் உப அஞ்சல் அலுவலகம் மாற்றப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு..!samugammedia

யாழ் வடமராட்சி மருதங்கேணி பிரதேசத்திற்குட்பட்ட போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவில் இயங்கிவந்த சுண்டிக்குளம் உப அஞ்சல் அலுவலகம் மாற்றப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதுவரை காலமும் போக்கறுப்பு கிராம சேவையாளர் பிரிவில் இயங்கிவந்த சுண்டிக்குளம் உப அஞ்சல் அலுவலகத்தை போதிய வருமானம் இன்மை என்னும் அடிப்படையில் வேறு ஒரு பிரதேசத்திற்கு மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தரமான வீதிகள் இன்மை, வைத்தியசாலை இன்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளால் நாளாந்தம் துன்பப்படும் எமக்கு இதுவரை காலமும் உதவியாக இருந்த சுண்டிக்குளம் உப அஞ்சல் அலுவலகமும் இல்லை என்றால் பல்வேறு இன்னல்களை சந்திப்போமெனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக எமது செய்தியாளர் சுண்டிக்குள  உப அஞ்சல் அலுவலக அதிகாரியை வினவிய போது மாத வருமானம் குறிப்பிட்ட எல்லைக்குள் இல்லாததால் வேறு ஒரு பிரதேசத்திற்கு அஞ்சல் அலுவலகம் மாற்றப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

இதுவரை காலமும் வருமானத்தை ஈட்டி வந்த சுண்டிக்குளம் உப அஞ்சல் அலுவலகத்திற்கு தூரதேசத்தில் இருந்து அதிகாரிகள் பணிக்கு வருவது சிரமம் என்பதனால்  இந்த அஞ்சல் அலுவலகம் மாற்றம் செய்யப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

எந்த சந்தர்ப்பத்திலும் குறித்தபிரதேசத்தை விட்டு சுண்டிக்குளம்  உப அஞ்சல் அலுவலகம் மாற்றம் செய்யப்படுவதை தாம் அனுமதிக்க போவதில்லை என அப்பகுதி மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *