20 ஒப்பந்தங்களில் கையெழுத்து – சீனாவிடம் சரணடைந்த மாலத்தீவு..!samugammedia

பிரதமர் நரேந்திரே மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு நாட்டின் மந்திரிகள் 3 பேர் மிகவும் கீழ்தரமாக விமர்ச்சிததை அடுத்து, அவதூறு கருத்து தெரிவித்த 3 மந்திரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

இந்த பரபரப்புக்கு மத்தியில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். நேற்று முன்தினம் சீனாவின் புஜியான் மாகாணத்தில் நடைபெற்ற மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் கலந்து கொண்டு பேசிய முகமது முய்சு, சீனாவை மாலத்தீவின் நெருங்கிய நட்பு நாடு என்று கூறியதுடன், தங்கள் நாட்டுக்கு அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீன அரசுக்கு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் பீஜிங்கில் உள்ள அதிபர் மாளிகைக்கு சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகளை விரிவான கூட்டாண்மைக்கு உயர்த்துவதாக அறிவித்ததை தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையிலான 20 முக்கிய ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *