தமிழரசுக் கட்சிக்கான தலைவரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய தீர்மானம்…!samugammedia

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான தெரிவு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக, தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இன்று(11) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெலவிலுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். 
எனினும், இக்கலந்துரையாடலில் கட்சியின் தலைவர்  தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால், திட்டமிட்டபடி எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஜனநாய முறையிலான இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *