இலங்கையின் மூத்த குடிமகனான கொட்டாச்சி நந்தீஸ் 109 ஆவது வயதில் மறைவு…!samugammedia

இலங்கையின் மூத்த நபராகக் கருதப்படும் கொட்டாச்சி நந்தீஸ் நேற்றையதினம் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 109 என்று கூறப்படுகிறது.

தேசிய முதியோர் செயலகம் இவரை நாட்டிலேயே மிகவும் வயதானவர் என்று அறிவித்திருந்தது.

நாகொட, கப்பிட்டியாகொடையை வசிப்பிடமாகக் கொண்ட மாகல கொட்டாச்சி நந்தியேஸ் 1914 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி பிறந்தார்.

இந்நிலையில், மறைந்த கொட்டாச்சி நந்தீஸின் இறுதிக் கிரியைகள் இன்று (13) பத்தேகம  மயானத்தில் இடம்பெறவுள்ளது.

அதேவேளை கொட்டாச்சி நந்தீஸின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *