இலங்கையிலிருந்து நாடு திரும்பிய பிரித்தானியாவின் இளவரசி…! samugammedia

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரித்தானியாவின் இளவரசி ஆனி, தனது விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (13) பிரித்தானியா நோக்கிச் சென்றுள்ளார்.

இன்று அதிகாலை 02.25 மணியளவில் இளவரசி ஆனி மற்றும் குழுவினரை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-505 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்டதாக விமான நிலைய கடமை அதிகாரி தெரிவித்தார்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த 10ஆம் திகதி இளவரசி ஆனி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தார்.

இந்நிலையில் அவர் இலங்கையில் தங்கியிருந்த காலப் பகுதியில் ஜனாதிபதி மற்றும் அரசியல் தரப்பினர்களுடன் சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *