புத்தாண்டின் விடியலைக் குறிக்கும் தைத் திருநாள் தேசத்தின் உயிர்நாடியின் பிரதிபலிப்பாகும் – பிரதமர் வாழ்த்து..!samugammedia

இந்து கலாசாரத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் தேசிய பண்டிகையான ‘தைப்பொங்கல்’ பண்டிகையானது விவசாய பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைதி, ஒற்றுமை மற்றும் அன்பு ஆகிய அடிப்படைப் பெறுமானங்களை உள்ளடக்கியுள்ளது என இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இயற்கையோடு இயைந்த பாரம்பரிய வாழ்வொழுங்கின் மீது நம்பிக்கை கொண்ட தமிழ் விவசாயிகள், சிறந்த விளைச்சலை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த அறுவடைத் திருவிழா தேசத்தின் உயிர்நாடியின் பிரதிபலிப்பாக அமையும்.

இது தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய மறுமலர்ச்சி என்ற எண்ணக்கருவுக்கு  சிறந்ததோர் உந்து சக்தியாகும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வளம் நிறைந்த புத்தாண்டின் விடியலைக் குறிக்கும் தைத் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்

Leave a Reply