இன்றைய நாளிற்கான வானிலை முன்னறிவிப்பு..!samugammedia

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்பதோடு கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

Leave a Reply