கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்!

அளுத்மாவத்தை – ரந்திய உயன வீட்டுத் தொகுதிக்கு அருகில் ‘படா ரஞ்சி’ என்ற செந்தில் ஆறுமுகம் துஷ்யந்த் என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் விற்பனையாளரான ‘புகுடுகண்ணா’ என்பவரின் நிதி நிர்வாகியாக பணியாற்றியவர் இவர் என்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 8.30 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த மூவர் கைத்துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மார்பு மற்றும் இடது கையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.

போதைப்பொருள் கடத்தல் கும்பலினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply