அஸ்வெசும நிவாரணத் திட்டம்: விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

 

மலையகத்தில் ‘அஸ்வெசும’ வேலை திட்டம் 45 சதவீதமே நிறைவடைந்துள்ளதாகவும், இத்திட்டம் முழுமையடைய மக்களின் ஒத்துழைப்பும் அவசியமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அஸ்வெசும உதவி பெறத்தகுதியிருந்தும், பெயர்ப்பட்டியலில் உள்வாங்கப்படாதுள்ளவர்கள் மற்றும் இதுவரை 45 சதவீதம் மட்டுமே பூர்த்தி  உள்வாங்கபட்டும்,

இன்றளவும் பணம் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளவர்கள் பிரதேச செயலகத்துக்குச் சென்று மீண்டும் விண்ணப்பிக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல மலையகத்திலுள்ள அஸ்வெசும பெறுவதற்கு தகுதியானவர்கள், எவராக இருப்பினும் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்றார்.

Leave a Reply