சம்பள உயர்வு கோரி வரணி வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்…!samugammedia

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப் புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து கொடிகாமம்-வரணி பிரதேச வைத்தியசாலை ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

முப்பத்தையாயிரம் ரூபா சம்பள உயர்வு, சீருடைக்காண பணம் அதிகரித்தல், மேலதிக நேர கடமைகளுக்கான கொடுப்பனவு, சிற்றூழியர்களை அதிகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கையினை முன்வைத்து வரணி பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் 12 மணி தொடக்கம் 1 மணி வரை பணிகளைப் புறக்கணித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply