தமிழ் அரசியலில் மீண்டும் பரபரப்பு…! சம்பந்தன்- சிறிதரன் திடீர் சந்திப்பு…! வெளியான காரணம்…!samugammedia

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரான சிவஞானம் சிறீதரன் இன்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் சிவஞானம் சிறிதரன் வெற்றியீட்டினார்.

இந்நிலையில் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட  சிறீதரன்  நேற்றையதினம் சமயத் தலைவர்கள் மற்றும்  கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்து தமது நன்றிகளை தெரிவித்ததுடன் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்.

இவ்வாறானதொரு நிலையில் இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனை மரியாதை நிமிர்த்தம்  நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Leave a Reply