வவுனியா நகர சபையின் அதிரடி…! வீதிகளில் திரிந்த கால்நடைகள் பிடிப்பு…!samugammedia

வவுனியா நகர சபையினால் வீதிகளில் நடமாடித் திரிந்த 80 கட்டாக்காலி மாடுகள் நேற்று பிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. 

இதனையடுத்து நகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்  நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், நேற்றையதினம்(30)  நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 80க்கும் மேற்பட்ட கால்நடைகள் நகர சபையினரால் பிடிக்கப்பட்டு தற்போது சபையின் பாராமரிப்பில் உள்ளது.

எனவே, கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்திய பின் தண்டப்பணத்தினைச் செலுத்தி அவற்றை மீளப்பெற்றுச்செல்லுமாறு சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகரசபை அறிவித்துள்ளது.

Leave a Reply