நடிகர் விஜயின் கட்சியின் பெயர் அறிவிப்பு!

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  அதன் பெயர் குறித்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் என நடிகர் விஜயின் கட்சிக்கு  பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.  விஜய் மக்கள் இயக்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக இருந்த (விமஇ) என்கிற app தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக கட்சி தொடங்கப்பட்ட பிறகு புதிய ஒரு app நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது.  விஜய் மக்கள் இயக்கம்,  புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என முன்னர் தகவல் வெளியாகியிருந்த நிலையில் சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நடிகர் விஜயின் கட்சியின் பெயர் அறிவிப்பு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply