பாணின் எடை குறித்த வர்த்தமானியில் குறைபாடு – பேக்கரி சங்கம் குற்றச்சாட்டு..!samugammedia

ஒரு பாணின் எடை மற்றும் அரை பாணின் எடையை குறிப்பிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறைபாடுகள் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஒரு பாணின் எடை 450 கிராம் எனவும், அதிகபட்சமாக 13.05 கிராம் எடையைக் குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரை பாணின் எடை 225 கிராம் இருக்க வேண்டும் என்றும், குறைக்கக்கூடிய அளவு 09 கிராம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply