கடற்படையின் வாகனத்துடன் மோதிய மாணவன் உயிரிழப்பு..!samugammedia

கடற்படையின் வாகனத்துடன் மோதுண்டு காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த மாணவன் ஒருவர்  நேற்று உயிரிழந்துள்ளார். மன்னார், மறிச்சுக்கட்டியைச் சேர்ந்த முஹமட் முத்திஹம் சாத் (வயது – 19) என்ற மாணவனே உயிரிழந்தவராவார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 31ஆம் திகதி சிலாவத்துறையில், மோட்டார் சைக்கி ளில் மாணவன் பயணித்தபோது. எதிரே வந்த கடற்படை வாகனம் திடீரென வலப்பக்கம் திரும்பியதால் விபத்தில் சிக்கியுள்ளார். 

இதன்போது படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளான். இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply