இராணுவம் நடாத்திய விளையாட்டு போட்டியில் வதிரி டயமண்ட் அணி வெற்றி…!samugammedia

இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடமராட்சி 4. வது சிங்கபாகு றெஜிமென்ற் ஏற்பாட்டில் வடமராட்சி வடக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 கழகங்களுக்கும்,  கரவெட்டி பிரதேச செயலகங்களிற்க்கு  உட்பட்ட  தெரிவு செய்யப்பட்ட 5 கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட உதை பந்தாட்ட போட்டியின் இறுதிப்  போட்டி இன்று பிற்பகல் 4 மணியளவில் கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் 4 வது சிங்கபாகு படை பிரிவு இராணுவ அதிகாரி மேஜர் பணம்கம தலமையில் இடம் பெற்றது.

இறுதி போட்டியில் வதிரி டயமண்ட் விளையாட்டு கழகமும்  சமரவாகு நியூட்டன் விளையாட்டு கழகமும் மோதின. வதிரி டயமண்ட் விளையாட்டு கழகம் முதல் போட்டி நேரத்தில் இரண்டு கோல்களை போட்டன. சமரவாகு நியூட்டன் விளையாட்டு கழகம் கோல் எதனையும் போடாத நிலையில் இரண்டாவது பாதிப் போட்டி நேரம் ஆரம்ம்பமாகியது.

இதன் போதும் வதிரி டயமன்ட் விளையாட்டு கழகம் நேரம் நிறைவடைவதற்க்கு மூன்று நிமிடங்கள் முன்பாக இரண்டு கோல்களை போட்ட நிலையில் மைதானத்திற்க்கு வெளியே இருந்த ரசிகர்கள் மைதானத்திற்க்குள் இருந்த விளையாட்டு வீரர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தினர்.


இதன் காரணமாக அந்த விளையாட்டு வீரர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் போட்டி சில நிமிடங்கள் தாமதிக்கப்பட்டு மீண்டும் ஆரம்பமாகியது. அவ் மூன்று நிமிடங்களிலும் கோல் எதனையும் இரண்டு அணிகளும் போடாத நிலையில் நான்கு கோல்களை போட்ட வதிரி  டயமண்ட் அணி வெற்றிவாகை சூடியது.

வெற்றிபெற்ற அணிகளுக்கான பரிசில்கள் கேடயங்களை பிரதம, சிறப்பு கௌரவ விருந்தினர்கள் வழங்கிவைத்தனர்.

மேஜர் ஜெனரல் யகம்பத், சிறப்பு  விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் பொறுப்பதிகாரி, நெல்லியடி வர்த்தகர் சங்க தலைவர்,  இராணுவ உயர் அதிகாரிகள், பருத்தித்திறை நெல்லியடி பொலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிகள்  ரசிகர்கள், விளையாட்டுக் கழகங்களின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *