சலூனுக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு….! நடந்தது என்ன? samugammedia

நோர்வூட் நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நியூட்டன் தோட்டத்தில்,   சிகை அலங்கார கடைக்குச் சென்று கொண்டிருந்த 14 வயதுடைய மாணவன் மீது மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த மாணவன், டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு, கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில்  குறித்த மாணவன் உயிரிழந்தார்.

இந் நிலையில் மாணவனின் சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று பரிசோதனை இன்றையதினம்(05)  இடம்பெறவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply