புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவுக்கு தயாராகும் கச்சத்தீவு!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவானது, இம்மாதம் 23 ஆம் திகதி மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அதற்காக  ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் நலன் கருதி, சுகாதாரம்,  குடிநீர், தற்காலிக தங்குமிடங்கள், சாலைகள்,இறங்குதுறைகள் , மின்சார விநியோகம்,  பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல சேவைகளை  வழங்குவதற்குறிய நடவடிக்கைகளைக்  கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட விகாரையின்  பழுதுபார்ப்பு பணிகள்  மற்றும் சுற்றுப்புற பகுதிகளை  தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளும் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply