எதிர்க்கட்சித் தலைவரைக் கொல்லவே கண்ணீர்புகைத் தாக்குதல்..! கிரியெல்ல பகிரங்க குற்றச்சாட்டு

 

எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை இலக்கு வைத்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவதை தான் பார்த்ததாக கூறிய லக்ஷ்மன் கிரியெல்ல, அதிர்ஷ்டவசமாக புகைக் குண்டானது தனது காலில் விழுந்ததாக தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ஆற்றிய உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியதாவது,

ஜனாதிபதியின் சிம்மாசன உரையிலிருந்து நாங்கள் எழுந்தோம். 

எங்கள் ஆதரவு தேவைப்பட்டால், எங்களுக்கு மரியாதை தேவை, எங்களுக்கு அதிகார பரவலாக்கம் வழங்கப்படவில்லை, எங்கள் அமைதியான போராட்டம் தாக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பகுதிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற்றோம்.

எங்களை அடித்து ஆதரவு கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?ஆதரித்தால் நாங்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாது. எதிர்க்கட்சிகளின் ஆதரவை இப்படியா கேட்பது.?

ஆட்சி மாற்றமொன்றின் ஊடாகத் தான் பொருளாதாரப் பிரச்சினைக்கும் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வினைக் காண முடியும்” என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *