ஜேர்மன் தூதுவரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனை, அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துத் தெரிவுக்கும் நோக்கில் ஜேர்மன் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில், ஈழ அரசியல் பரப்பை முன்னிறுத்திய அவரது அடுத்தகட்ட செயல்நோக்குகள் குறித்து தாம் கரிசனையோடிருப்பதாக தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply