கைதிகளின் பெயர் பட்டியலை கோரிய கெஹெலிய..! – சிறைச்சாலையில் சுவாரஸ்ய சம்பவம்

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிறு குற்றங்களுக்காக 5,000 ரூபா மற்றும் அதற்கு குறைந்தளவிலான பணத்தினை செலுத்த முடியாது சிறையில் உள்ளவர்களின் பெயர் பட்டியலை கோரியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பெயர் பட்டியலில் 20 பேரின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. 

இந்த பெயர் பட்டியலினை எடுக்க பிரதான கராணம் இவர்களது தண்டப்பணத்தினை செலுத்தி அவர்களை விடுவிக்க எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அறிந்த பெண் சிறைக்கைதி ஒருவர், கெஹெலிய ரம்புக்வெல்லவை சந்திக்க சென்றதாகவும்  தெரியவருகின்றது. 

“அமைச்சரே, எனது தண்டப்பணத்தினை நீங்கள் செலுத்த வேண்டாம். எனது தண்டனைக்காலம் சில நாட்களில் முடிவடையும். பின்னர் நான் சிறைச்சாலயில் இருந்து வெளியேறுவேன். 

நீங்கள் தண்டப்பணத்தினை செலுத்த வேண்டாம். அந்த 5,000 ரூபாவை எனது கைகளில் தாருங்கள் என அந்தக் கைதி கேட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Leave a Reply