மஸ்கெலியா – மவுஸ்சாக்கலை பகுதியில் உள்ள மாணா பற்றைக்கு விஷமிகள் தீ வைப்பு..!!

மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் புரவுன்லோ தோட்ட கரையோர பாதுகாப்பு பகுதியில் உள்ள கருப்பன் தைல மற்றும் மாணா பற்றைக்கு தற்போது விஷமிகள் தீ வைத்துள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்ட பகுதியில் உள்ள மவுசாகல நீர் தேக்க பகுதிகளில் உள்ள மாணா மற்றும் டேர்பெண்டைன் வண பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு விஷமிகள் தீ வைத்ததால் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியது.

அந்த பகுதியில் சென்று தீயை அணைக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் வன ஜீவராசிகள் மற்றும் பறவைகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply